Sifnas Hamy

ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க தீர்மானம்

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்க ஜனாதிபதியின் விசேட பணிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தினங்களில் வழங்க முடியாதவர்களின் கொடுப்பனவுகள் ஏப்ரல் 6ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கண்ககுகளின் ஊடாக ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More
Sifnas Hamy

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு


கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 117 ஆக உயர்வுஇலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read More
Sifnas Hamy

இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?

இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?
தொகுப்பு: மு. அ. அப்துல் முஸவ்விர்
இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?
இஸ்லாத்தின் நடுநிலையைப் புரிந்துகொள்வது எவ்வாறு..?
வர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வர வேண்டுமோ அவ்வாறு திரும்பி வருகின்றார். (25:71)
அல்லாஹ் தனது தூதருக்கு இறக்கியருளியது போன்று இஸ்லாத்தை முழுமையாகவும் நடுநிலையாகவும் புரிந்து கொள்வதன் மூலம் அதன் இரு சிறப்பம்சங்கள் வெளிப்படுகின்றன.
– இஸ்லாம் பூரணமும் முழுமையும் கொண்டதொரு கொள்கை.
அகீதா, ஷரீஆ, அறிவு, அமல்; இபாதத், முஆமலாத்,கல்வி, பண்பாடு, சத்தியம், பலம், தஃவா, அரசு, மார்க்கம், உலகம், நாகரிகம், உம்மத் இவை அனைத்தையும் அது கொண்டிருக்கிறது. இபாதத்கள் இன்றி பண்பாடுகளோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ளல், பண்பாடுகளை புறக்கணித்து இபாதத்களில் மூழ்கிப் போதல், ஷரீஆவை மறுத்து அகீதாவை மாத்திரம் ஏற்றுக்கொள்ளல், பலம் பிரயோகிக்கப்படாமல் சத்தியத்தை அடைந்து கொள்ளல், தலாக்கை மறுக்கும் திருமண முறைமையை அங்கீகரித்தல், ஜிஹாதை மறுத்து சமாதானத்தை மாத்திரம் கருப்பொருளாக்கல், உலகை புறக்கணித்து மார்க்கத்தை பின்பற்றல், அரசியலை ஒதுக்கிவிட்டு தஃவா செய்தல்…  இவ்வாறு மார்க்கத்தை கூறுபோடுவதை இஸ்லாமிய போதனைகள் ஏற்றுக்கொள்வதில்லை.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
‘அல்லாஹ் இறக்கியவற்றைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு கூறுங்கள். அவர்களுடைய மனோ இச்சைகளை பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு இறக்கியவற்றில் சிலதை விட்டும் அவர்கள் உங்களை திசைதிருப்பி விடாமல் எச்சரிக்கையாக இருங்கள்’ (5:49)
இஸ்லாம் முழு மனித சமூகத்திற்கும் வழிகாட்டக் கூடிய சர்வதேசத் தூது. அது அனைத்து காலத்துக்கும் பொருத்தமானது. வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் வழிகாட்டும் தூதும் கூட.
– இரு விடயங்களுக்கு மத்தியில் நடுநிலைமையை கைக்கொள்ளல்.
ஒன்றோடொன்று இணைய முடியாத, முரண்பட்ட பண்புகள் கொண்டவை என பலராலும் ஊகிக்கப்படும் அம்சங்களை நடுநிலையாக அணுகுவதை இது குறிக்கிறது.
ஆன்மீகம், சடவாதம், இறைவன் சார்ந்தவை, மனிதன் சார்ந்தவை,  சிந்தனை, உணர்வு, முன்னுதாரணங்கள், நடைமுறை சாத்தியமானவைகள், தனிமனிதன், சமூகம், அறிவு, வஹி, உலகம், மறுமை, தனிமனித சுதந்திரம், இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பொருளாதார பௌதீக முன்னேற்றம், ஆன்மீக பண்பாட்டு வளர்ச்சி… இவை ஒவ்வொன்றுக்கும் அதற்குறிய பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஒன்று இன்னொன்றின் மீது அல்லது பலதின் மீது அத்துமீற முடியாது.
‘அளவை நிறுவையில் நீங்கள் அத்துமீற வேண்டாம். நிறுவையை நீதியாக மேற்கொள்ளுங்கள். நிறுவையில் குழப்பம் செய்யாதீர்கள்’ (55: 8-9)
வணக்க வழிபாடுகள், கல்வி, உடற்பயிற்சி, அழகியற் கலைகள், விஞ்ஞானம் என்பன இஸ்லாத்தின் மிக முக்கிய பகுதிகள். வணக்க வழிபாடுகள் ஆன்மீகத்தை மேம்படுத்துகின்றன. கல்வி அறிவை வளர்க்கின்றது. உடற்பயிற்சி உடலுக்கு தேகாரோக்கியத்தை அளிக்கிறது. அழகியற் கலைகள் மனித உணர்வுகளை எழுப்பிவிடுகின்றன. விஞ்ஞானம் வாழ்வொழுங்கை செம்மைப்படுத்துகின்றது.
கலை, இலக்கியங்களை வளர்த்தெடுத்தலும் தூதை பலப்படுத்துவதற்காக அவற்றை பயன்படுத்தலும்
அவனே அனைத்து படைப்புகளையும் மிக கவர்ச்சியாக படைத்தான்
அவனே அனைத்து படைப்புகளையும் மிக கவர்ச்சியாக படைத்தான்
இவ்வடிப்படையைப் பார்த்து சிலர் ஆச்சரியப்படலாம். மார்க்கம் கலைகளின் எதிரி எனும் மனோநிலையிலேயே அவர்கள் தொடர்ந்துமிருக்கின்றனர். இது பிழையானதொரு மனப்பதிவு. கலையின் அடிநாதம் அழகை உணர்ந்து ரசிப்பதும் அவற்றை கவர்ச்சியாக வெளிப்படுத்துவதும்தான். இஸ்லாம் முஸ்லிமின் உள்ளத்தில் இக்கலையுணர்வை விதைக்கிறது. பிரபஞ்சம் முழுக்க பரவிக் காணப்படும் படைப்பாளனது பிரமிக்கக் கூடிய அழகான இறை ஆக்கங்களை பார்த்து ரசிக்கும் படி அது முஃமினுக்கு கற்றுக் கொடுக்கிறது:
‘அவனே அனைத்து படைப்புகளையும் மிக கவர்ச்சியாக படைத்தான்’ (ஸஜதா 07),
‘அனைத்தையும் மிக நேர்த்தியாக செய்த அல்லாஹ்வின் படைப்பு’ (நம்ல் 88),
‘அருளாளனின் படைப்பில் எவ்வித கோளாறுகளையும் கண்டுகொள்ள மாட்டாய்’ (முல்க் 03)
அல்குர்ஆனை படித்துப் பார்ப்பவர் அது மனித பார்வைகளை பிரபஞ்சம், அதன் ஒவ்வொரு பகுதிகளை நோக்கி திருப்புவதையும் அதனூடாக மனித அறிவு மற்றும் உள்ளத்தை விழிப்பூட்டுவதையும் இலகுவாக கண்டுகொள்வார்:
வானம்
‘அவர்களுக்கு மேல் இருக்கும் வானத்தை நம் அதனை எவ்வாறு கட்டினோம், எவ்வாறு அலங்கரித்தோம் என்று அவர்கள் பார்க்கவில்லையா?’ (காப் 06).
பூமி
‘அழகான வகை வகையானவற்றை நாம் அவற்றில் முளைக்கச் செய்தோம்’ (காப் 07),
‘வானத்திலிருந்து அவன் உங்களுக்காக நீரை இறக்கி வைத்தான். அதனைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்தோம்’ (நம்ல் 60).
விலங்குகள்- கால்நடைகளையும் அதன் பயன்களையும் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு கூறுகிறான்
‘நீங்கள் அவற்றை காலையில் ஓட்டிச் செல்லும் போதும் மாலையில் ஓட்டி வரும் போதும் அவற்றில் உங்களுக்கு அழகிருக்கிறது’ (நஹ்ல் 06). மனிதன்- ‘அவனே உங்களை உங்களது உருவங்களை அழகாகப் படைத்தான்’ (தகாபுன் 03),
‘மனிதனை நாம் மிக நேர்த்தியாக அழகாகப் படைத்தோம்’ (தீன் 04).
நபியவர்கள் குறிப்பிட்டார்கள்: நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அழகை விரும்புகிறான் – முஸ்லிம்
அல்குர்ஆன் தன்னளவில் அற்புதமானதோர் இலக்கிய நடையைக் கொண்டிருக்கிறது. இணைவைப்பில் ஈடுபட்டிருந்த அரபிகள் கூட மிக ஆவலுடன் அதற்கு செவிசாய்த்தனர். சிலர் கூறினர் : அதற்கென்றொரு சுவை இருக்கிறது. அதில் ஓர் ஈர்ப்பிருக்கிறது. அது மிக அழகிய குரல் கொண்டு ஓதப்படும் போது அழகோடு இன்னோர் அழகும் சேர்ந்து கொள்கிறது.
நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : உங்களது குரல்களைக் கொண்டு அல்குர்ஆனை அழகுபடுத்துங்கள். அழகிய குரல் குர்ஆனின் அழகை மென்மேலும் அதிகரிக்கிறது. (அஹ்மத்)
ஒலி, ஒளி முப்பரிமாண உயர்ரக கலைகளை இஸ்லாம் வரவேற்கிறது. கூடவே சில நிபந்தனைகளையும் அது முன்வைக்கிறது. இஸ்லாத்திற்கு முன் இருந்த நாகரீகங்களில் பவலாகப் பின்பற்றப்பட்டு வந்த சிலை வணக்கத்திற்கு அழைப்புவிடுக்கும் அல்லது அதற்கு பலம் சேர்க்கும் வகையில் அமையும் கலைகளை விட்டும் இஸ்லாம் தூரமாகிக் கொள்கிறது. கலை, இலக்கியம் அதன் ஒவ்வொரு பகுதிகளும் ஏகத்துவத்தை ஏதோவொரு வகையில் விளக்குவதாகவும் அதன் பக்கம் அழைப்பதாகவும் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது.
கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய மற்றும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மானக்கேடான விடயங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடிய கலைகளையும் இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாற்றமாக உள்ளத்தை தூய்மைப்படுத்தல், மனித கண்ணியத்தை உயர்த்தல், படைப்பாளனுடனான நெருக்கத்தை ஏற்படுத்தல், படைப்பினங்களுக்கு நன்மை செயதல் போன்றவற்றுக்கான தூண்டுதலாக அக்கலைகள் அமைய வேண்டும் என அது வழிகாட்டல் வழங்குகிறது:
‘நிச்சயமாக அல்லாஹ் பயந்து நடப்பவர்களோடும் நல்லது செய்பவர்களோடும் இருக்கிறான்’ (நஹ்ல் 128)
இஸ்லாம் கலைகளை பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது
இஸ்லாம் கலைகளை பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது
இஸ்லாம் கலைகளை பலப்படுத்துவதுடன் அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது என்பதை இப்பின்னணியில் புரிந்து கொள்ள முடியும். இஸ்லாமிய வரலாற்றின் செழிப்புமிகு காலப்பகுதிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். கட்டிட நிர்மாணக் கலைகள் மலிந்து காணப்பட்டன. அலங்காரம், அரபு எழுத்தணி போன்ற கலைகள் தனிச்சிறப்பு பெற்று மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. இக்கலைகளின் வெளிப்பாடுகளை மாளிகைகள், மஸ்ஜித்ள், நூதனசாலைகள் போன்றவற்றில் மிகத் தெளிவாகவே கண்டுகொள்ள முடியுமாக உள்ளது.
இஸ்லாமிய வாழ்வமைப்பு என்பது இருக்கமானதொரு வாழ்வமைப்பு, அதில் சிரிக்கக் கூடிய உதடுகள், இன்பமனுபவிக்கக் கூடிய உள்ளங்கள், ஆறுதலளிக்கக் கூடிய நகைச்சுவைகள், திருமண விழாக்களில் மேளம் அடித்து பாட்டு பாடுகின்ற குடும்பங்களை கண்டுகொள்வது சாத்தியமற்றது போன்ற கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை.
முகம் சுழித்த கடும் போக்காளரின் புறதோற்றப்பாடோடு இஸ்லாத்தை அடையாளப் படுத்துவது இஸ்லாத்திற்கு செய்யும் மிகப்பெரும் அநீதி. கலைப்பகுதியில் இஸ்லாமிய சட்டங்களை தெளிவுபடுத்தும் சில புத்தகங்களை நாம் வெளியிட்டிருக்கிறோம். தீவிர நிலைகளுக்கு அப்பால் நின்று இஸ்லாத்தின் நடுநிலைமையான நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக இப்புத்தகங்களை வாசிப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
அறபு : ஷெய்க் அல்கர்ளாவி
தமிழ் : ஷெய்க் ரிஷாட் நஜிமுடீன் (நளீமி)
Read More
Sifnas Hamy

முஸ்லிம்களின் கொள்கை என்ன?

முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா?
உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை,
A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்)
B) இறைவன் இல்லை (நாத்திகர்)

இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும் இரு பிரிவினராகப் பிரிக்கலாம். அவை,
A-1 ஒரே கடவுள் நம்பிக்கை கொண்ட இந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், etc.
A-2 ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களில் நம்பிக்கை கொண்ட இந்து, கிறித்துவர்கள், etc.

ஒரே இறைவன் - படைத்தவனை ஒருமைப்படுத்துதல் - ஏக இறைவன் - என்ற கொள்கையினையே "ஏகத்துவம்/தௌஹீத்" என்ற பெயரில் முஸ்லிம்களாகிய நாம் பெரும்பாலும் அறியப் படுகிறோம்.
அதாவது "ஏகத்துவவாதிகள்" அல்லது "தௌஹீதுவாதிகள்" என்றதுமே அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான்; அவர்களின் கொள்கை இஸ்லாம் என்று முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம். இது சரியா என்பதே, இக் கட்டுரையின் கேள்விக்கு அடிப்படை.
இப்போது, "இறைவன் ஒருவனே" என்போரைக் குறித்து பார்ப்போம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை கொண்டோர் முஸ்லிம்கள் மட்டும் அல்ல; உலகில் வேறு சில மதத்தவரும் உள்ளனர் என்பதை நாம் மறுக்க இயலாது.
எளிய உதாரணம், நம் தமிழகத்தில் முன்னர் வாழ்ந்திருந்த, இப்போதும் காடு மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள். இவர்களின் தெய்வ நம்பிக்கை என்பது, சக்தி ஒன்றுதான் என்பதே. தமிழிலேயே, "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்றொரு சொல் உண்டு. இந்தச் சொல்வழக்கு உருவானது சித்தர்களிலிருந்தே. எனில், இந்தச் சித்தர்களும் ஏகத்துவவாதிகள் தானே?
இதுபோல், இறைவன் ஒருவன்தான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டு வேறு பலரும் உள்ளனர். உதாரணமாக, கிறிஸ்த்தவத்தில் "ஜெகோவா" பிரிவினர். இவர்கள், கர்த்தரை-இறைவனை ஜெகோவா என்ற பெயரில் அழைக்கின்றனர். அவர்கள், இயேசுவைத் தூதர் என்றே கூறுகின்றனர். எனில், இவர்களும் ஏகத்துவவாதிகள் தானே? உதாரணங்கள் இன்னும் பல சொல்லலாம். சுருக்கமாக, "ஏகத்துவம்-இறைவன் ஒருவனே" சிந்தனை கொண்டோர் எல்லோரையுமே முஸ்லிம்கள்தான் என்று நாம் சொல்வதற்கு இயலாது. அதனை அல்லாஹ்தான் தீர்மானிக்க வேண்டும்.
அடிப்படையில் இஸ்லாமிய கொள்கைக்கும் ஏகத்துவ கொள்கைக்கும் வித்தியாசம் உண்டு. அதனை இப்படி சொல்லலாம்: ஏகத்துவ கொள்கை இஸ்லாமிய கொள்கையின் உள்ளே அடங்கும். அதாவது, இஸ்லாமியக் கொள்கையின் ஒரு அம்சமே ஏகத்துவம். ஆனால், ஏகத்துவம் மட்டுமே முழுமையான இஸ்லாமியக் கொள்கையாக ஆகி விடாது.
அப்படி எனில், இஸ்லாமியக் கொள்கை தான் என்ன?
இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை என்பது "ஏகத்துவம்+தூதுத்துவம்" ஆகிய இரண்டும் உள்ளடக்கியதாகும். "ஏகத்துவம் - லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை" - இதனை மட்டும் ஒருவர் உளமார முன் மொழிந்துவிட்டால் அவர் முஸ்லிமாகிவிடுவார் என்று நாம் ஒருபோதும் கூறுவதில்லை. "லா இலாஹ இல்லல்லாஹ் - ஏகத்துவம்" + "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - தூதுத்துவம்" ஆகிய இரண்டையும் சேர்த்து மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும். இதுதான் இஸ்லாமிய கொள்கை!
ஒவ்வொரு நபிமாரின் சமூகமும் இறைவன் ஒருவன் என்று நம்புவதோடு, அவன் அனுப்பிய தூதர்தான் அந்த நபி என்பதையும் நம்பவேண்டும். அப்படி நம்பினாலே அவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள்.
ஆக, இஸ்லாமியக் கொள்கை என்பது "ஏகத்துவம்+தூதுத்துவம்" ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
முன் சென்ற பத்தியில் குறிப்பிட்ட ஏகத்துவச் சிந்தனை கொண்ட சித்தர்கள், இஸ்லாத்தின் அடிப்படை கூறான "ரிஸாலத்" (தூதுத்துவம்) என்பதை ஏற்காதவர்கள். இவர்கள் தமது ஆன்மீகத் தேடுதல்+ மனக் கட்டுப்பாடு (தியானம்) மூலம் இறைவனை அறிந்துகொள்ளலாம், இறைவனை அடைந்து கொள்ள முடியும் (முக்தி நிலை) என்ற எண்ணங்களோடு ஓரிறைக் கொள்கையை நிலை நிறுத்தியுள்ளவர்களாவர்.
வரலாற்றை நோக்கினால், தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தமக்கு நபித்துவம் கிடைக்கும் முன்னர் இந் நிலையிலேயே இருந்தார்கள். அதாவது, சமூகத்தின் சீரழிவான போக்கினைக் கண்டு மனம் நொந்து, நிச்சயமாக இறைவன் இத்தகைய மோசமான விசயங்களை ஏற்றுக்கொள்பவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு தனிமையில் சென்று இறை எண்ணங்களில், தியானங்களில் அமர்ந்தார்கள்.
தொடர்ந்து நபியவர்களைத் தம் தூதுவராக தேர்வு செய்த ஏக இறைவனான அல்லாஹ், மக்களிடம் சரியான இறை கொள்கையை எடுத்துரைக்கும் பொறுப்பைக் கொடுத்தான். நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு விட்ட நிமிடத்திலிருந்து, "ஒரே இறைவன் - ஏகத்துவம்" என்பதோடு நில்லாமல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இறைத்தூதர், என்பதையும் சேர்த்து நம்பினால் மட்டுமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
அதே சமயம், ஒரே இறைவன் - ஏகத்துவக் கொள்கை கொண்ட ஒருவர், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தூதரென ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விடுவாரேயானால் அவர் முஸ்லிம் ஆகமாட்டார். ஆனாலும், ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் அவரும் தௌஹீதுவாதி / ஏகத்துவவாதியே!
அல்லாஹ்வும் தன் மறையில், அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து (தாமும்) நல்ல அமல்கள் செய்து “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று சொல்பவரை விட அழகிய சொல்லைக் கூறுபவர் யார்?” (குர்ஆன் 41:33) என்று கூறுகிறான்.

எனவே, நாம் நம்மை வெறுமனே தவ்ஹீதுவாதி என்று அழைத்துக் கொள்வதைவிட, என் கொள்கை தவ்ஹீது என்று சொல்லிக் கொள்வதைவிட இறைக்கட்டளையின் படி "நான் முஸ்லிம்; என் கொள்கை இஸ்லாம்" என்று சொல்லிக் கொள்வதே சாலப் பொருத்தமானது.

- அபூ சுமையா
Read More
Sifnas Hamy

300வது விக்கெட்டை வீழ்த்தினார் மலிங்க

இலங்கை அணி வீரர் லசித் மலிங்க ஒருநாள் தொடரில் தனது 300வது விக்கெட்டை சற்று முன்னர் கைப்பற்றியுள்ளார். 

இந்த இலக்கை எட்டும் 4வது இலங்கை வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Read More
Sifnas Hamy

இலங்கைக்கு இலக்கு 376

4வது ஒருநாள் போட்டியில் 376 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகின்றது. 

முன்னதாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 3-0 என தொடரை வசப்படுத்தியுள்ள நிலையில் இன்று நான்காவது போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது. 

இதில், நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

இதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான தவான் 4 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் மறுமுனையில் இருந்த ரோகித் சர்மாவுடன் கரம் கோர்த்த அணித் தலைவர் விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை களங்கடித்த இருவரும் சதமடித்து நீண்ட நேரம் நிலைத்து ஆடினர். 

இதற்கமைய, ரோகித் சர்மா 104 ஓட்டங்களையும் கோலி 131 ஓட்டங்களையும் விளாசியதோடு, ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்த பாண்டே 50 ஓட்டங்களையும் மஹேந்திர சிங் தோனி 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 375 ஓட்டங்களைக் குவித்துள்ளது. 
Read More
Sifnas Hamy

வௌிநாட்டு முதலீடுகள் 300 வீதம் அதிகரிப்பு

2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ம் ஆண்டில், வௌிநாட்டு முதலீடுகள் நூற்றுக்கு 300 வீதம் அதிகரித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

அத்துடன், 1000 ஏக்கர் அளவிலான தொழிற்துறை வலையத்தை ஏற்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Read More
......